தாம்பரம் : தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்பவரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் அவர்களின், உத்தரவின் பேரில் தாம்பரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளரும், அவரது தனி படையினரும் கண்காணித்து வந்த போது இன்று காலை 7.30 மணிக்கு தனிப்படையினருக்கு கேரளாவை சேர்ந்த ஒரு நபர் ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் தாம்பரத்திற்கு கஞ்சா வாங்கி வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் தாம்பரம் ரயில் நிலையம் அருகே சோதனை நடத்தினர். அப்போது தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்த சந்தேக நபரை விசாரணை செய்ததில் அவர் முகமது ரிஸ்வான் (27), தனலூர் கிராமம், திரூர், மலப்புரம் மாவட்டம், கேரளா மாநிலம் என்றும் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி ரயிலில் கொண்டு வந்து தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சில்லறை விற்பனைக்கு எடுத்து செல்வதாக தெரிவித்தார் அவரை சோதனை செய்து பார்த்தபோது அவரிடம் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள 18. 300 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது அதை கைப்பற்றி அவரை கைது செய்து தாம்பரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின் அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். 18 கிலோவிற்கு மேல் எடை உள்ள கஞ்சாவை ஒடிசாவில் இருந்து கடத்தி வந்த முகமது ரிஸ்வானை கைது செய்த தனிப்படையினரை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்