மதுரை: மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மேவூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.சிவக்குமார் அவர்களின் மேற்பார்வையில், கீழவளவு காவல் நிலைய ஆய்வாளர் திரு.கருப்பசாமி அவர்களின் உத்தரவின் பேரில், (10.12.2025) ம் தேதி இரவு கட்டகாளைபட்டி பேருந்து நிறுத்தம் அருகே கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அசோக்குமார் தலைமையில் காவலர்கள் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்து TN 59 DZ 5353 என்ற பதிவு எண் கொண்ட வெள்ளை நிற Baleno காரை சோதனை செய்த போது, சட்டத்திற்குப் புறம்பாக சுமார் ரூ.77650/ ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த 1) மனோகரன் (52). த/பெ பெருமாள், அம்பலகாரன்பட்டி, மேலூர் இருப்பு அசோக் நகர், நத்தம், திண்டுக்கல் மாவட்டம் மற்றும் 2) தென்னரசு (66). த/பெ. அழகர்சாமி, மணப்பச்சேரி, மேலூர் மதுரை மாவட்டம் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து ரூ.77650 ரூபாய்மதிப்புள்ள அசாம் மாநிலத்தை சேர்ந்த லாட்டரி சீட்டுகள், லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த ரொக்க தொகை ரூபாய் .73910/-, TN 59 DZ 5358 என்ற எண்ணுள்ள white colored Baleno Car, மேலும் விற்பனைக்காக பயன்படுத்திய White Lenova Laptop 01, Vivo Mobile Phone 02, One plus Mobile 01 & Itel feature phone 01 and Note book 03, Bill Book 03, Calculator 02 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கீழவளவு காவல் நிலையத்தில் மேற்படி எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு உயரதிகாரிகள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தார்கள். இனி வரும் காலங்களில் இது போன்று வெளி மாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் வாங்கி வந்து விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்
















