திண்டுக்கல்: திண்டுக்கல் சோலைஹால் தெரு பகுதியில், விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது, 52 1/2 கிலோ கஞ்சா, கார், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல்லுக்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், எஸ்.பி .தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகுபாண்டி மற்றும் காவலர்கள் திண்டுக்கல்லில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திண்டுக்கல் சோலைஹால் தெரு பகுதியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த அருண்குமார்(47), சுரேஷ்(42), யோகராஜ்(23). ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 52 1/2 கிலோ கஞ்சா, கார், 4 செல்போன்கள், பணம் ரூ.5000 ஆகியவற்றை பறிமுதல் செய்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து, காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன், சார்பு ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா