சென்னை: சென்னை வேளச்சேரி, பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த தனிஷ்கா, என்பவர், தனக்கு போர்ச்சுக்கல் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக, கூறி அரும்பாக்கத்தை சேர்ந்த கிளினா கிரியேட்டா (29), அவரது தாய் அனிதா கிரியேட்டா (59), ஆகியோர் ரூ.30 லட்சம் மோசடி செய்து விட்டதாக, வேளச்சேரி காவல் துறையினரிடம், புகார் செய்தார். இதுபற்றி காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் தாய், மகள் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு, இருப்பது தெரிந்தது. இதையடுத்து வேளச்சேரி காவல் துறையினர், விமான நிலைய குடியுரிமை, அதிகாரிகளுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.