கன்னியாகுமரி: 23 வது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டி சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் *திரு.திலீபன். இதன் மூலம் 2026 ஆம் ஆண்டு தென் கொரியா நாட்டில் நடைபெறும் உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். உதவி ஆய்வாளர் திலீபன் அவர்களை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R.ஸ்டாலின் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
















