தஞ்சை: தஞ்சை அடுத்த பர்மா காலனி இளைஞன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் இவருடைய மகன் சந்தோஷ் 24 இவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அருகில் உள்ள ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை நான்கு வருடமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலுக்கு பெண்ணின் தாய் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் அந்தப் பெண்ணின் தாய் பிள்ளையார்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வேந்திரன் என்பவரிடம் தனது பெண்ணை காதலிப்பவரை கண்டிக்கும் மாறு தெரிவித்துள்ளார்.
உடனே செல்வேந்திரன் சந்தோசை அழைத்து கண்டித்துள்ளார் இதனால் தனது காதலுக்கு இடையூராக இருக்கும் செல்வேந்திரன் கொலை செய்ய திட்டமிட்டு சந்தோஷ் செல்வேந்திரன்ஐ மது அருந்தலாம் என்று கூறி தஞ்சை கிரீன் சிட்டி பகுதிக்கு நேற்று இரவு அழைத்துள்ளார்.
அங்கு வந்த செல்வேந்திரன் உடன் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் அமரேஷ் ஆகியோர் மது அருந்திக் கொண்டிருக்கும் பொழுது சந்தோஷ் மற்றும் அமரேஷ் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் செல்வேந்திரன் சரமாரியாக தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டி உள்ளனர் இதில் ரத்த வெள்ளத்தில் செல்வேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் விரைந்து சென்று செல்வேந்திரன் பிரேதத்தை கைப்பற்றி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் அமரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் தனது காதலுக்கு இடையூறாக இருந்து கண்டித்ததால் அவரை கொலை செய்ததாக சந்தோஷ் கூறியுள்ளார்.