கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம்- காப்புகாடு பகுதியில் கையில் பையுடன் சுற்றி திரிந்த 2 பேரை வனக்காவலர்கள் தடுத்து சோதனை செய்தனர். ஒருவர் தப்பி ஓடியநிலையில் மற்றொருவர் பையில் குடையப்பட்ட நிலையில் மரவள்ளி கிழங்குடன் வேட்டையாடும் நோக்கில் அவுட்டுக்காய் செய்வதற்காக வெடிமருந்துகள் வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. ஸ்கூட்டருடன் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
















