கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாதேப்பட்டி கிராமம், ஏரிக்கொள்ளை கிராமம் ஆகிய இரண்டு வெவ்வேறு இடங்களில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக வெடிபொருட்கள் தயார் செய்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு இடங்களிலும்சோதனை செய்தபோது அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக வெடிப்பொருட்களை தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து வெடி பொருட்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















