நெல்லை: நெல்லை மாவட்டம், சங்கர் பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் நிறுவனத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஆலையில் வெடி குண்டு வைத்திருப்பதாகவும்,அது எங்கு இருக்கு என்று சொல்வதற்காக பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் உற்பத்தி மேலாளர் தட்சிணா மூர்த்தி என்பவர் தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 2 பைப் வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து அந்த வெடிகுண்டுகள் ஆள் நடமாட்டம் இல்லாத தெ ன்கலம் பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத குவாரிக்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு வைத்து இரண்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இவ்வழக்கில் ஏற்கனவே ஆறுமுகம்,சலீம்,வைரவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்திருந்த நிலையில் பெருமாள் தெற்கு ரத வீதியை சேர்ந்த சோமசுந்தரம்(29),சி.என் கிராமத்தை சேர்ந்த உடையார்(31) ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.