திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகக் மா்மநபா் ஒருவர் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (09.01.2025) அன்று தொடா்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளாா். இதைத் தொடா்ந்து, மாநகர காவல் ஆணையா், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., உத்தரவின்பேரில் ரோந்து போலீசாரும், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசாரும் ஆட்சியா் அலுவலகத்தில் மோப்பநாய், மெட்டல் டிடெக்டா் கருவி உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். ஆனால், வெடிபொருள் எதுவும் சிக்கவில்லை.
காவல்துறையினர் விசாரணை நடத்தி பேட்டையை சோ்ந்த செய்யது அப்துல் ரஹ்மான் (45). என்பவரை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்