அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு விஸ்வேஷ் பா சாஸ்திரி இ. கா.ப., அவர்கள் வெங்கனூர் காவல் நிலையத்தில் (12-10-2025) ஆர்வம் மேற்கொண்டார்கள். சட்ட விரோத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்கள். மேலும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள். இந்த ஆய்வின் போது கீழப்பழுவூர் வட்ட காவல் ஆய்வாளர் திரு வெங்கடாசலம் அவர்கள் வெங்கனூர் காவல் உதவி ஆய்வாளர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் காவலர்கள் இருந்தார்கள்.