விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம் வீரசோழன் கிராமத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவு படி இந்திய தேசிய லீக் தலைவர் திரு. பசீர் அகமது, மற்றும் மதுரை தெற்கு வாசல் கீழத்தெரு ஜமாத் தலைவர் திரு. அலி அக்பர், அவர்களின் தலைமையில் திருச்சுழி காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ஜெகநாதன் அவர்கள், வீர விளையாட்டான கிடா முட்டு சண்டை போட்டியை தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற கிடா ஆடுகளுக்கு. பித்தளை அண்டா சுவர் கடிகாரம். பிளாஸ்டிக் சேர், மற்றும் பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இப் போட்டியை அப்பகுதி மக்கள் விழாவாக கொண்டாடினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது