திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே மேல இலந்தைகுளம், மாதா கோவில் தெருவை சேர்ந்த தர்மராஜ் (60). அன்னபுஷ்பம் (55) தம்பதியினர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் அன்னபுஷ்பம் தனது தம்பி சிங்கம் ஜேக்கப் வீட்டில் வசித்து வருகின்றார். கடந்த (01.03.2025) அன்று அன்னபுஷ்பத்தின் தம்பியான சிங்கம் ஜேக்கப் (40). தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த தர்மராஜ் அவரிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து சிங்கம் ஜேக்கப் தேவர்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் மானூர் வட்ட காவல் ஆய்வாளர், சந்திசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தர்மராஜை (03.03.2025) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்