மதுரை : திருப்பரங்குன்றத்தில், வீட்டை உடைத்து ரூபாய் ஒருலட்சம் கொள்ளையடித்துச்சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பரங்குன்றம் பாலசுப்பிரமணி நகர் சாம்பசிவம் நகரைச் சேர்ந்தவர். முத்துக்கண்ணன் மனைவி விஜயா (45). உடல் நிலை சரியில்லாத இவர், மகளை ஆஸ்பத்திரியில் காண்பித்துவிட்டு, மகள் வீட்டிலேயே தங்கிவிட்டார். பின்னர் அடுத்தநாள் அவர் வீட்டிற்குச் சென்றார். அப்போது, அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பெட்ரூமில் கப்போர்டில் அவர் வைத்திருந்த ரூபாய் ஒருலட்சமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து ,விஜயா திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் வீடுபுகுந்து கொள்ளையடித்துச் சென்ற ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி