மதுரை: மதுரை அருகே தனக்கன் குளம் பி.ஆர்.சி காலனியை சேர்ந்தவர் காமராஜ் 67. இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார் .பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்கதவை உடைத்து வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள் பணம் ரூபாய் 39 ஆயிரத்து 700, அரைகிலோ வெள்ளி பொருட்கள் முதலியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுதொடர்பாக காமராஜ் கொடுத்த புகாரில் திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி