திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி நேதாஜி நகரைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றவர் மீண்டும் 27 ஆம் தேதி வீட்டை பார்க்கும் பொழுது பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் ஒரு செல்போன் திருடு போயிருந்தது தெரியவந்தது, இதனையடுத்து இக்குற்ற சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் பேரில் பழனி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சிவசக்தி அவர்கள் மேற்பார்வையில் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.உதயகுமார் அவர்களின் தலைமையில் காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மதுரை, எஸ்.எஸ் காலனியை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் ரூ. 6,00,000/- மதிப்புள்ள தங்கம், மற்றும் வைர நகைகள், செல்போன் ஒன்றும் மீட்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா