மதுரை : மதுரை அருகே ஆனையூரில், வீட்டை உடைத்து தங்கம் வெள்ளி நகைகள் கொள்ளை அடித்துச்சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். ஆனையூர் இமயம் நகரைச்சேர்ந்தவர் ரவி மனைவி ரெஜினா(30). இவர், குடியிருந்த வீட்டை காலி
செய்யச்சொல்லி வீட்டின் உரிமையாளர் பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், கூடல் புதூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பப்பட்டுள்ளது. இதனால், ரெஜினா தாய்வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில், இமயம்நகர் வீட்டில் பொருள்களை எடுக்கச்
சென்றார். அப்போது, வீட்டின்கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த தங்கம், வெள்ளி நகைகளும் அவர் பைக்கையும் மர்ம ஆசாமி திருடிச்
சென்றீவிட்டார். இந்த சம்பவம் குறித்து, ரெஜினா கூடல்புதூர் போலீசில் புகார்
செய்தார். அந்த புகாரில் ,சில நபர்களின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, போலீசார் வழக்குப்பதிவுசெய்து, திருட்டுஆசாமிகள்,
குறித்து விசாரணை நடத்தி, அவர்களை தேடிவருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி