திண்டுக்கல் : திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகே சங்கனம்பட்டி விஸ்தரிப்பு ஏரியா பகுதியில் குடியிருப்பவர் அலெக்ஸ், இவரது மனைவி சோனியா. நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு திண்டுக்கல் நகர் பகுதிக்கு பொருட்கள் வாங்கிவிட்டு மதியம் வீட்டிற்கு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 5 பவுன் தங்க நகை திருடுபோயுள்ளது. இதுகுறித்து தாலுகா போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா