திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நவ்வலடி மெயின் ரோடு அருகே தற்பொழுது கோயம்புத்தூரில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன்(54). என்பவர் 3 சென்ட் இடத்தில் ஒரு குடிசை வீடும், அதனுடன் மின் இணைப்பும் வைத்துள்ளார். அந்த இடத்தை நவ்வலடி, தெற்கு தெருவை சேர்ந்த வர்ணபாஸ்(46). என்பவர் (24.09.2024) அன்று அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜே.சி.பி இயந்திரம் மூலமாக குடிசை வீட்டையும், அதற்கான மின் இணைப்பையும் இடித்து சேதப்படுத்தியுள்ளார்.இதுகுறித்து தகவல் அறிந்த பால சுப்ரமணியன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உவரி காவல் ஆய்வாளர், சிவகளை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வர்ணபாஸை (01.10.2024) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்