திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி, அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துலட்சுமிக்கும், (53). அதே ஊரைச் சேர்ந்த செல்லதுரைக்கும் (48). இடையே உள்ள மனைபிரச்சினையில், (07.11.2024) அன்று முத்துலட்சுமி வீட்டிற்கு வந்த செல்லதுரை, அவரிடம் நீ எப்படி என் இடத்தில் சுவர் கட்டலாம் என்று கூறி கையால் தாக்கியும், சுவரை இடித்து சேதப்படுத்தியும் மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து முத்துலட்சுமி சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர், காளியப்பன் விசாரணை மேற்கொண்டு செல்லதுரையை இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்