மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் உட்கோட்டம், திருமங்கலம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லம்பட்டறை பகுதியில் காதல் திருமணம் செய்தது சம்மந்தமாக பிரியதர்ஷினி என்பவரது வீட்டிற்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது சம்மந்தமாக. மதுரை மாவட்டம், திருமங்கலம் உட்கோட்டம், திருமங்கலம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லம்பட்டறை பகுதியில் பிரியதர்ஷினி வயது-(32). க/பெ. பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார்.
இவரது உடன்பிறந்த தம்பி அஷ்வத்தாமன் என்பவர் கவிராஜன் என்பவருடைய மகள் அனிதா என்பவரை கடந்த 6 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வசித்து வருகிறார். இக்காதல் திருமணம் சம்மந்தமாக இருகுடும்பத்தாரும் மன வருத்தம் இருந்து வந்துள்ளது. இந்த விரோதம் காரணமாக அனிதாவின் தம்பி கௌசிக் என்பவர் பிரியதர்ஷினியின் வீட்டிற்கு நேற்று இரவு சுமார் 9.45 மணியளவில் சென்றுள்ளார். வீட்டுக்குள் சென்று படுக்கை அறை மற்றும் வரவேற்பு அறை ஆகியவற்றில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டார்.
இதனால் வீடு முழுவதும் எறிந்து உள்ளே இருந்த இரண்டு பீரோக்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. இது சம்மந்தமாக மேற்படி குற்றவாளிகள் மீது திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கவிராஜன் மற்றும் அவரது மகன் கௌசிக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்















