திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே நாகனம்பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கலைவாணி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செல்வம், சரவணகுமார், ஜஸ்டின், ஜாபர்சாதிக், முருகன் மற்றும் ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்ட போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஹக்கீம்சேட் என்பவர் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்ததை அடுத்து அந்த வீட்டில் இருந்து 300 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து அந்த வீட்டிற்கு சீல் வைத்தனர். மேலும் இது குறித்து தப்பி ஓடிய ஹக்கீம் சேட்டை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா