கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதி திம்மனட்டி கிராமத்தில் சாமுவேல் செல்வபிரபு என்பவர் ஊராட்சி துவக்க பள்ளியில் BT assistant ஆக பணிபுரிந்து வருவதாகவும், தேன்கனிக்கோட்டையில் விவேகானந்த நகரில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், (26.11.2025) ஆம் தேதி சுமார் காலை 8 மணிக்கு வீட்டில் இருந்தபோது தண்ணீர் மோட்டார் அருகில் சத்தம் வந்து சென்று பார்த்த போது யாரோ திருட முயற்சி செய்ததை கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் எதிரியை பிடித்து வைத்து தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திற்கு போன் மூலம் தகவல் சொல்லி சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து திருட முயன்ற நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். சாமுவேல் செல்வபிரபு காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















