திண்டுக்கல்: திண்டுக்கல் இந்திரா நகரில் மாரிமுத்து மற்றும் சொப்னா தேவி ஆகியரின் பூட்டிய வீட்டின் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று பணம் மற்றும் நகைகள் மர்ம நபர் திருடி சென்றார். இது சம்பந்தமாக நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின்படி, டிஎஸ்பி கார்த்திக், சங்கர் ஆகியோரின் மேற்பார்வையில், நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார்,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன்,ஜார்ஜ் எட்வர்ட், தலைமை காவலர்கள் முகமது அலி,விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வைத்து கரூர் மாவட்டம் வடிவேல் நகரை சேர்ந்த முனியசாமி மகன் சதீஷ்குமார் என்பவரை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















