கிருஷ்ணகிரி: பர்கூர் காவல் நிலைய பகுதியில் சின்னபருகூர் கொர்ல சென்னப்பசெட்டி தெருவில் குடியிருக்கும் உஷாராணி என்பவர் (21.11.2024)) ஆம் தேதி இரவு சுமார் 08.50 மணிக்கு தனது வீட்டில் இருந்தபோது வெளியில் இருந்த குற்றவாளிகள் போன் செய்து கதவை திறக்க சொன்னதாகவும், உஷாராணி கதவைத் திறந்த உடன் அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் திடீரென வீட்டிற்குள் நுழைந்து அதில் இரண்டு பேர் உஷாராணியின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டதாகவும், ஒருவன் கத்தியை காட்டி அச்சுறுத்தி இடுப்பு பகுதியில் கத்தியால் கீறி இரத்தக்காயம் ஏற்படுத்தியும், மற்றொருவன் கையால் உஷாராணியின் மூக்கின் மீது குத்தி இரத்தக்காயம் ஏற்படுத்தியும், உஷாராணியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் பீரோவில் வைத்திருந்த வெள்ளி மற்றும் நகைகளை பறித்து சென்று விட்டதாகவும் (22.11.2024) ஆம் தேதி உஷாராணி பர்கூர் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து இரண்டு குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.