கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அசோக்குமார் என்பவர் PK பெத்தனப்பள்ளி கிராமத்தில் குடியிருந்து கொண்டு அத்திப்பள்ளியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் (06.01.2025) ஆம் தேதி இரவு பணி முடித்து வீட்டிற்கு வந்து (07.01.2025) ஆம் தேதி காலை சுமார் 06.40 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வாதியின் அம்மா வீட்டை சாத்திவிட்டு வீட்டின் பின்புறம் துணி துவைக்க சென்று இருந்த நேரத்தில் சுமார் 11.35 மணிக்கு பீரோ திறக்கும் சத்தம் கேட்டு கண் விழித்து பார்த்தபோது குற்றவாளி பீரோவில் இருந்து மணி பர்சை எடுத்து பார்த்து திருட முயற்சி செய்தவனை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பிடித்து குருபரப்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து வீட்டில் திருட முயன்ற நபரை கைது செய்து குற்றவாளியின் இருசக்கர வாகனத்துடன் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர், அசோக்குமார் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்