கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட M – அக்ரஹாரம் கிராமத்தில் நஞ்சா ரெட்டி என்பவர் குடியிருந்து கொண்டு விவசாயம் செய்து வருவதாகவும் (17.03.2025) ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்த போது சுமார் 00.45 மணிக்கு குற்றவாளிகள் காம்பவுண்டு சுவர் ஏரி உள்ளே குதிக்கும் சத்தம் கேட்டு நஞ்சா ரெட்டி தனது நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் சொல்லி வரவழைத்து குற்றவாளிகளை பிடிக்க முயற்சித்த போது இரண்டு நபர்களில் ஒரு நபர் தப்பிக்க ஓடி தண்ணீர் தொட்டியின் மீது விழுந்ததாகவும், மறைந்திருந்த மற்றொரு நபரை பிடித்து வைத்து கெலமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் திருட முயன்ற இரண்டு நபர்களை கைது செய்து குற்றவாளிகளிடமிருந்து கதவை உடைக்கும் பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். நஞ்சா ரெட்டி காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் வீட்டில் திருட முயன்ற இரண்டு நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்