கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நல்லம்மாள் என்பவர் ஊத்தங்கரை காமராஜர் நகரில் குடியிருந்து வருவதாகவும் (05.12.2024) ஆம் தேதி காலை சுமார் 06.00 மணிக்கு வாதியும் அவரது மகனும் வீட்டில் இருந்தபோது தன்னுடைய மகன் வேலைக்கு சென்ற பிறகு தான் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து குற்றவாளி வீட்டிற்கு வந்து வீட்டில் ஏதாவது வேலை இருக்கிறதா என கேட்டதாகவும் வாதி எந்த வேலையும் இல்லை என கூறிய பிறகும் குடிக்க தண்ணீர் வேண்டும் என கேட்கவே வாதி வீட்டின் உள்ளே சென்றபோது குற்றவாளி திருடும் நோக்கத்தோடு வீட்டின் உள்ளே பெட்ரூமிற்கு சென்று பர்சில் இருந்த மூன்று பவுன் தங்க செயினை திருடிக் கொண்டு சென்று உள்ளார். என தெரிந்து (08.12.224) ஆம் தேதி நல்லம்மாள் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து வீட்டில் திருடிய நபரை கைது செய்து அவரிடம் இருந்து தங்கச் செயினை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்