கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர், பிரவீனா தலைமையில் காவல்துறையினர் இரவு ரோந்து பணியின் போது, பூதப்பாண்டி அருகே ராமச்சந்திரன் என்ற நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்த பொழுது அவரிடம் 70 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதை அடுத்து தீவிரமாக நடத்திய விசாரணையில் அவருக்கு கஞ்சா வழங்கியது அவருடைய மைத்துனர் சகாயம் மிக்கேல் ராஜ் ஜோசப் என்பது தெரியவந்ததையடுத்து, அவரது வீட்டில் சோதனை நடத்திய பொழுது வீட்டில் மொட்டை மாடியில் 13 கஞ்சா செடிகள் வளர்த்து விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்