திண்டுக்கல்: திண்டுக்கல், காமராஜபுரத்தில் குடிபோதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருதரப்பினருக்கிடையே அடிதடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரின் வீட்டிற்கு தீ வைத்தனர். மேலும் இது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு இரு தரப்பினரிடையே சேர்ந்த வேளாங்கண்ணி மகன் நிவாஸ் கண்ணன்(28).நாகராஜ் மகன் குமார்(26). பாண்டியன் மகன் வீரபாண்டி(27). கருப்பையா மகன்கள் வல்லரசுபாண்டி(27). தவசிபாண்டி(24). ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















