திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் வசந்தபுரம் 3வது தெருவில் குடியிருக்கும் பவானி(31). குடும்பத்தினருடன் (31.10.2024)-ஆம் தேதி வீட்டின் வாசல் அருகில் பட்டாசு வெடித்து கொண்டிருக்கும் பொழுது அப்பகுதியல் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த மேலப்பாளையத்தை சேர்ந்த பாலையா மகன் பேச்சிமுத்து என்ற குமார் (21). என்பவரை தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த குமார் நண்பர்கள் இருவருடன் பவானியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டின் வாசலில் இருந்த கண்ணாடி, EB மீட்டர் பெட்டி மற்றும் இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து பவானி (01.11.2024)-ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மேலப்பாளையம் காவல்துறையினர் பேச்சிமுத்து என்ற குமார், நண்பர்கள் உட்பட மூவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்