திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பழவூர் நந்தன்விளையை சேர்ந்த செல்வம்(47). என்பவரின் மனைவி வசந்தி பழவூர் கடற்கரையில் கடை வைத்து நடத்தி வருகிறார். அக்கடையில் கூடங்குளம், சௌந்தரலிங்கபுரத்தை சேர்ந்த சங்கர் (25). என்பவர் வேலை செய்து வந்துள்ளார். அவர் சரிவர வேலை செய்யாததால் வசந்தி சங்கரை வேலையை விட்டு நிறுத்தி உள்ளார். இதனை மனதில் கொண்டு (11.12.2024) அன்று வசந்தியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை அவதூறாக பேசி கையால் தாக்கி காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து வசந்தியின் கணவரான செல்வம் பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர், அனீஸ் வழக்கு பதிவு செய்து சங்கரை (12.12.2024) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்