திண்டுக்கல்: திண்டுக்கல், சிறுமலை, அண்ணாநகரை சேர்ந்த சுரேஷ்(40). என்பவர் குடும்பத்துடன் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் நள்ளிரவு வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசினர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர்கள் கிருஷ்ணவேணி, அங்கமுத்து மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக சிறுமலை, அண்ணாநகரை சேர்ந்த சிவா(22). பிரகாஷ்(27). மற்றும் (14). வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















