கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் சசிகலா என்பவர் விவசாயம் செய்து வருவதாகவும் (24.07.2025) ஆம் தேதி விடியற்காலை சுமார் 3.00 மணிக்கு நிலத்திற்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது குற்றவாளி வீட்டின் பூட்டை உடைத்ததாகவும் வாதி வருவதை பார்த்த குற்றவாளி காம்பவுண்டு சுவரைத் தாண்டி ஓடும்போது கீழே விழுந்து விட்டதாகவும் வாதி குற்றவாளியை பிடிக்கும் போது கையை கடித்து விட்டதாகவும் தன்னுடைய கணவரையும் செங்கல் எடுத்து வலது கைமீது அடித்து உள் காயம் ஏற்படுத்தி விட்டதாகவும் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் குற்றவாளியை பிடித்து வைத்து பர்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லி போலீசார் வந்து குற்றவாளியை கைது செய்து காவல் நிலைய அழைத்து சென்றனர். இருவரும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.