திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள ஆர்.எம்.டி.சி. காலனியை சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர், கோவையில் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் மனைவி ராம்கமலா 41. நேற்று இடைவிடாது மழை பெய்ததால் ராம்கமலா வீட்டை பூட்டிவிட்டு, மகன் விக்ரமனுடன் தனது சகோதரி லட்சுமிவிமலா வீட்டிற்கு சென்றுவிட்டார். வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். மர்மநபர்கள் வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த 6½ பவுன் நகையை திருடி சென்றனர். இதற்கிடையே இன்று காலை மீண்டும் வீட்டிற்கு வந்த ராம்கமலா, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.விஜய். திரு.மலைச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.