திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி, குறிஞ்சி நகரில் குடியிருக்கும் LIC-ல் பணியாற்றும் ராமமூர்த்தி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து 30 பவுன் தங்க நகை, ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆயக்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா