திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஆர்.எம்.டி.சி.காலனி,அபிராமி நகர் ஆகிய பகுதிகளில் வீடு புகுந்து நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்.பிரதீப் உத்தரவின் பேரில்,புறநகர் துணை கண்காணிப்பாளன். உதயகுமார் மேற்பார்வையில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்.சந்திரமோகன்,சார்பு ஆய்வாளர். பிரபாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை காவல்துறையினர் நகையை திருடிச் சென்ற தலைமறைவு குற்றவாளி சாமியார் புரத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 15 1/2 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா