மதுரை: மதுரை அருகே சிலைமானில் வீடு புகுந்து 8 பவுன் நகை மற்றும் ரூபாய் 2 லட்சத்தை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை அருகே சக்கிமங்கலம் செல்வராஜ் காலனியை சேர்ந்தவர் அழகு பாண்டி 39. இவர், சலவைத் தொழிலாளி ஆவார் .இவர், தனது வீட்டில் கப்போர்டில் பெட்டியில் எட்டு பவுன் தங்க நகையும் ரூபாய் இரண்டு லட்சம் மும் வைத்திருந்தார். இந்நிலையில், அவசர தேவைக்காக அந்த பணத்தை எடுக்க சென்றபோது, பெட்டியுடன் பணமும் நகையும் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ,அழகு பாண்டி சிலைமான் போலீசில் புகார் செய்தார் .புகாரில், இந்த திருட்டில் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப் படுவதாகவும் அவர்கள் பெயரையும் தெரிவித்துள்ளார். .சிலைமான் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.