திருநெல்வேலி: கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அணைத்தலையூரை சேர்ந்த பேச்சியம்மாள் 36, என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.
26.10.2021 அன்று பேச்சியம்மாள் அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நகைகளை வீட்டு பீராவில் வைத்துள்ளார். பின்னர் பேச்சியம்மாள் அவரது மகன் மற்றும் மகளை அவரது உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டு வயலுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
மேற்படி இசக்கியம்மாள் மதியம் வந்து வீட்டை திறந்து பார்த்த போது வீட்டின் பீரோவை உடைத்து 4 பவுன் மதிப்பிலான தங்க செயினை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பேச்சியம்மாள் கங்கைகொண்டான் காவல்நிலையத்தில் 27.10.2021 அன்று புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு.பெருமாள் அவர்கள், விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நகைகளை திருடியது பேச்சியம்மாளின் உறவினரான அனைத்தலையூரை சேர்ந்த மரிய அஸ்வினி 26), அவரது கணவர் சிவா கண்ணன்30), என தெரியவந்தது.
மேற்படி இருவரையும் காவல் ஆய்வாளர் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் குற்றவாளிகள் திருடிய 4 பவுன் நகையையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.