தென்காசி: தேவர்குளம் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட கூவாச்சிபட்டியில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட வழக்கில் மூவிருந்தாளியை சேர்ந்த விஜயராஜ்(30), அ.மருதப்பபுரத்தை சேர்ந்த வேல்முருகன்(23), ஆகிய இருவர் கைது. 9½ பவுன் தங்க நகை மற்றும் 42 ஆயிரம் ரூபாய் பறிமுதல். மேற்படி வழக்கில் எதிரிகளை கைது செய்து நகைகளை மீட்டு திறம்பட செயல்பட்ட தேவர்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன், தலைமை காவலர் திரு.வேல்பாண்டி, முதல்நிலை காவலர்கள் திரு.தங்கதுரை, திரு. மணிமொழியன், திரு.மனோகரன், மற்றும் காவலர்கள் திரு.கற்பூதபாண்டி, திரு.மருதுபாண்டி ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் திரு.சரவணன், இ.கா.ப, அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி வெகுமதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.