மதுரை : மதுரை அருகே,திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், 255 இறுதி ஆண்டு படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பங்கு பெற்றனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில், சென்னையைச் சார்ந்த எஸ்.கே.என். ஆர்கனைசேஷன் பிரைவேட் லிமிட், கோயம்புத்தூரை சார்ந்த நோவா சாப்ட்வேர், ஹார்டுவேர் சாப்ட்வேர், மற்றும் Aquasub Engineering, மதுரையைச் சார்ந்த சுரேஷ் மாஸ் மார்கெட்டிங் ஆகிய கம்பெனிகளின் சார்பில் 195 மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் , எஸ்.கே.என். ஆர்கனைசேஷன் சார்பில் முனைவர் சுப்பிரமணியம் மற்றும் சௌந்தரராஜன், eNova Software and Hardware Solutions Ltd சார்பில் காட்வின் மற்றும் ஸ்டீபன் ஜெயக்குமார், Aquasub Engineering கம்பெனி சார்பில் மணிசங்கர் மற்றும் கணேஷ்குமார், சுரேஷ் மார்க்கெட்டிங் சார்பில் சுரேஷ் கண்ணன், சுவாமிநாதன், சதீஷ், சரவண முத்து, பொன்வேந்தன் ஆகிய மனிதவள மேலாளர்கள், கம்பெனி உரிமையாளர்கள் பங்கு பெற்றனர்.
முக்கியமாக விவேகானந்த கல்லூரியின் பழைய மாணவர் சுரேஷ் கண்ணனின் நிறுவனமாகிய Suresh Mass Marketing Pvt Ltd சார்பில் 55 மாணவர்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் . இந்த வேலை வாய்ப்பு முகாமில் மாத சம்பளம் ரூபாய் 12,000 ரூபாயிலிருந்து ரூபாய் 20 ஆயிரம் வரை உள்ள வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டது. கல்லூரியின் வேலைவாய்ப்பு இயக்குனர் முனைவர் செல்லபாண்டியன் அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டார். கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த, கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன், துணைமுதல்வர் முனைவர் கார்த்திகேயன், முதன்மையர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி