கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தில் ரவி என்பவர் அவரது நிலத்தில் நெற்பயிர்களுக்கு நீர் பாய்ச்ச சென்ற போது மோட்டார் ரூமில் இருந்து மோட்டாருக்கு செல்லும் காப்பர் ஒயர் சுமார் 300 மீட்டர் அளவுள்ள ஒயர் திருடபட்டு இருந்ததாகவும் (07.07.2025)ஆம் தேதி காலை சுமார் 03.00 மணிக்கு நிலத்தில் யாரோ திருடி சென்று விட்டதாகவும், ரவி கெலமங்கலம் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் இரண்டு குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.