திருச்சி: தமிழ்நாடு ஊர்க்காவல்படை சார்பில் நடத்தப்பட்ட 29-வது தொழிற்திறன் போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் திருச்சி மாவட்ட ஊர்க்காவல்படை சார்பில் கலந்து கொண்ட ஊர்க்காவல்படையினர் முதலுதவி, துப்பாக்கி சுடுதல், கபாடி போட்டி மற்றும் ஓட்ட பந்தயம் ஆகிய போட்டிகளில் கோப்பைகள் வென்றனர். தொழிற்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கோப்பைகள் வென்ற ஊர்க்காவல்படையினரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.