தூத்துக்குடி : திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு இடையேயான 29வது சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து கடந்த (01.02.2025) அன்று நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டிகளில் தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டு கொடிஅணிவகுப்பு, 100மீட்டர் ஓட்டப்பந்தயம், 400மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம் ஆகியவற்றில் முதலிடத்தை பிடித்தும் ஒருங்கிணைந்த விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்தும் வெற்றி பெற்றனர்.
மேற்படி சரக அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினரை (08.02.2025) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பாராட்டி வாழ்த்தினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப, தூத்துக்குடி ஊர்காவல்படை வட்டார தளபதி திரு. பாலமுருகன் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.