தென்காசி : தென்காசி மாவட்டம், கலப்பகுலம் பகுதியை சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர் இன்ஸ்டாகிராமில் குறைந்த விலையில் மொபைல் போன் விற்கப்படுவதாக வந்த விளம்பரத்தை நம்பி 12,800/- ரூபாய் பணத்தை விளம்பரத்தில் வந்த வங்கி கணக்கிற்கு Phone Pe மூலமாக அனுப்பி ஏமாந்து விட்டதாகவும், தனது பணத்தை மீட்டுத் தருமாறு தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில்.
கொடுத்த புகாரின் பெயரில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சுவாமிநாதன் அவர்களின் வழிகாட்டுதலின் படி காவல் ஆய்வாளர் திருமதி. ஜோஸ்லின் அருள்செல்வி அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி பணத்தை மீட்டார். இவ்வாறு மீட்கப்பட்ட 12,800/- ரூபாய் பணம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சுவாமிநாதன் அவர்களின் முன்னிலையில் தகுந்த ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கி ஒப்படைக்கப்பட்டது.