மதுரை: உத்தங்குடியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். மதுரை உத்தங்குடி மெயின் ரோடு அம்மச்சியாபுரத்தில்தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கே.புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று சோதனை நடத்தினர். அந்த சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அந்தக் கடையிலிருந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பதுக்கி வைத்திருந்த 85 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் சுந்தரராஜனை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி