தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலைய சரகத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஆழ்வார்குறிச்சி ராஜலிங்கபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சக்தி வடிவேல் (29). மீது காவல் ஆய்வாளர் திருமதி.காளீஸ்வரி அவர்கள் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது..