விருதுநகர் : காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பேரூராட்சியில், உள்ள சின்னக்குளம் ஊரணியில் கழிவுநீர் தேங்கி அசுத்தமாக இருந்து வந்தது. சின்னக்குளம் ஊரணியை தூர்வாரி மேம்பாடு செய்ய வேண்டும் என்று மல்லாக்கினார் பேரூராட்சி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில், அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவின் பேரில், சின்னக்குளம் ஊரணியை கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் (2022 – 2023), ஆம் ஆண்டு நிதி திட்டத்தின் கீழ் சுமார் 85 இலட்சம் மதிப்பில் மேம்பாடு செய்ய உத்தரவு வழங்கப்பட்டது.
தற்போது ஊரணி தூர்வாறும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஊரணி மேம்பாடு செய்யும் பணியை தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். உடன் மல்லாங்கிணறு பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ், துணைத் தலைவர் மிக்கேலம்மாள், செயல் அலுவலர் அன்பழகன், இளநிலை பொறியாளர் கணேசன், மாவட்ட வர்த்தகரணி போஸ், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட கவுன்சிலர், பேரூர் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி