திண்டுக்கல் : பழனியில் சாலையோரத்தில் செல்போன் கவர் விற்பனை செய்யும் வியாபாரியை செல்போன் கடை வைத்துள்ள சுதர்சன் என்பவர் தாக்கும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வறுமையில் உள்ள இவர் சாலை ஓரங்களில் செல்போன் கவர் விற்பனை செய்து வருகிறார்
பழனி பேருந்து நிலையத்தில் செல்போன் கடை வைத்துள்ள சுதர்சன் என்ற நபர் 50 ரூபாய்க்கு செல்போன் கவரை நீ விற்பனை செய்தால் நாங்கள் எல்லாம் என்ன செய்வது என கேட்டு மிரட்டி கன்னத்தில் அடித்துள்ளார் இதனை வீடியோ எடுத்து வாட்சப் குழுவில் பகிர்ந்து உள்ளனர் வீடியோ வைரல் ஆன நிலையில் பழனி பேருந்து நிலையத்தில் செல்போன் கடை வைத்துள்ள சுதர்சன் என்பவரை போலிசார் கைது செய்துள்ளார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.