மதுரை: சோழவந்தானில் அனைத்து வியாபாரிகள் நல சங்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தலைவர் ஜவஹர்லால் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் எம்.கே. முருகேசன், கல்யாண சுந்தரம், ராஜாடேவிட் ராஜாமுகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். செயலாளர் ஆதி பெருமாள் தீர்மானங்களை வாசித்தார். பொருளாளர் கேசவன் ஆண்டு வரவு செலவுகளை வாசித்தார். துணைத்தலைவர் ராஜ்குமார், இருளப்பன் என்ற ராஜா, சங்கர்கணேஷ், குணா ஆகியோர் சங்க வளர்ச்சி பற்றி பேசினார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி